முழுமையான சீடத்துவ பயிற்சிப் பள்ளியானது பெண்கள் மற்றும் வாலிபர்கள் உள்ளடங்கலான திருச்சபைகளின் தலைவர்களை, இலங்கையாகிய எமது தாய் நாட்டில் தொடங்கி,அனைத்து தேசங்களிலும், தடைகளைத் தாண்டி சீடர்களை உருவாக்குவதற்கு தயார் செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை, கடந்த 70 வருடகால முழுமையான ஊழிய வரலாற்றினை கொண்டுள்ள (NCEASL) இ.தே.கி.சு.ஐ. இனால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமானது "தேசத்தினை சீடராக்குவோம்" எனும் கட்டமைப்பிற்குள், எமது சமுகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வகையிலான, உறவுமுறை, கலாச்சாரம் மற்றும் விழுமியங்களைக் கொண்ட வாழ்க்கை முறையின் மூலம் சுவிசேஷத்தினை அறிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவிசேஷமானது, பாவத்தில் வாழுபவர்களை மாத்திரமல்லாது தேசங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளடங்கலான அனைத்து படைப்புக்களையும் மறுரூபப்படுத்துதலாகும்.
இதற்கமைய நாம் கேட்கும் கேள்வி :
சீடத்துவமுள்ளதொரு நாடு எவ்வாறு காணப்படும்?
இவ்வாறான சீடத்துவமிக்க நாடாக இலங்கை மறுரூபமாவதில் ஒன்றிணைந்த திருச்சபைகளின் பங்களிப்பும் அடங்கும் என்பதோடு அவ்வாறானதொரு நாடு பின்வரும் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும்.

தனிநபர் மற்றும் கூட்டு நீதி

சமூக அமைதி

பொருளாதார தன்னிறைவு

பொது நீதி
இவ் ஒவொரு பண்புகளையும் அடிப்படையாக கொண்ட ஒவ்வொரு தொகுதியும் அடைப்படை கோட்பாடுகளுக்கான அறிமுகம், சமூக காலநிலை தொடர்பான பகுப்பாய்வு, விவிலிய விளக்கவுரை, மற்றும் திருச்சபை தலைவர்கள் தமது ஊழியத்தில் உள்வாங்கவேண்டிய விரிவான நடைமுறை படிமுறைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக உள்ளூர் மொழிகளில் வெளியிடப்படும்.
பாடநெறி தொடர்பாக:
இப்படத்திட்டமானது மூத்த மற்றும் இளம் திருச்சபை தலைவாகள் மற்றும் இறையியலாளர்களை உள்ளடக்கிய வரைபுக் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறி, குறித்த துறைகளில் அனுபவமிக்க நபர்களால் கற்பிக்கப்படும் 12 வாரகால செயல்முறை ஊழிய பயிற்சி, 24 மணி நேர ணுழுழுஆ மற்றும் கூகிள் வகுப்பறை முறை மூலமான நேரடி அமர்வுகள் உள்ளடங்கலான 72 மணி நேர கற்கை நேரத்தினை மும்மொழிகளிலும் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் பெண்கள் மற்றும் வாலிப தலைவர்கள் உள்ளடங்கலாக இலங்கையின் 25 திருச்சபைகளிலிருந்து 3 திருச்சபை தலைவர்களை கொண்டிருக்கும். இப்பயிற்சியின் நிறைவின் போது 4 பயிற்சி திட்டங்களையும் முழுமையாக பூர்த்தி செய்த சபைகளுக்கு Nஊநுயுளுடு இன் செயன்முறை ஊழிய பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.